சீன சுற்றுலா பயணிகளின் வருகை : கிரேக்க சுற்றுலா அமைச்சர் எதிர்பார்ப்பு
2023-01-24 17:47:58

சீனச் சந்தை, கிரேக்கத்தின் சுற்றுலாத் துறைக்கு மிகவும் முக்கியமானது. மீண்டும் வருகை தரும் சீன சுற்றுலா பயணிகள், உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு ஆக்கப்பூர்வமான பயன்களைக் கொண்டு வரும் என்று கிரேக்க சுற்றுலா துறை அமைச்சர் வசிலிஸ் கிகிலியஸ் சமீபத்தில் தெரிவித்தார்.

நாட்டின் சுற்றுலாத் துறை 2023ஆம் ஆண்டு தொடர்ந்து மீட்சி பெறும் விதமாக, சீனச் சந்தையை விரிவாக்கி, சீனப் பயணிகளை ஈர்க்க முயற்சி எடுக்க வேண்டும். சீன சுற்றுலா பயணிகள் மீண்டும் வருகையை வரவேற்பதற்கு முனைப்புடன் தயார் செய்து கொண்டிருக்கிறோம் என்றும் கிகிலியஸ் கூறினார்.

சுற்றுலாத் துறை கிரேக்கப் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரங்களில்  ஒன்றாகும். அதன் மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.