மேலை நாடுகளுக்கு துருக்கி எச்சரிக்கை
2023-02-06 10:04:49

பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணமாகக் கொண்டு, சில மேலை நாடுகள் அண்மையில் துருக்கியிலுள்ள தூதரகங்களைத் தற்காலிகமாக மூடி, துருக்கியில் பயணம் மேற்கொள்வதன் மீதான எச்சரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து துருக்கி அரசுத் தலைவர் ரெசெப்தாயிப் எர்டோகன் கூறுகையில், துருக்கி பிப்ரவரி 6ஆம் நாள் அமைச்சரவை கூட்டத்தை நடத்தி முடிவு செய்யும் என்றார். மேலும், இம்மேலை நாடுகளின் செயல் தொடர்ந்தால், பதில் விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென பல்வேறு நாடுகளின் தூதாண்மை அதிகாரிகளிடம் துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.