சீனப் பங்கு சந்தையின் மீது அந்நிய முதலீட்டாளர்கள் அக்கறை
2023-02-08 19:01:07

சீனப் பெருநிலப்பகுதியின் பங்கு சந்தை மற்றும் ஹாங்காங் பங்கு சந்தையில் ஜனவரி 25ஆம் நாள் வரை கடந்த 4 வாரங்களில், வெளிநாட்டு நிதி மேலாளர்கள், முறையே 139 கோடி மற்றும் 216 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளனர் என்று EPFR ஆய்வு நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.

இந்நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி, 2018ஆம் ஆண்டு பிறகு இதுவரை இல்லாத அளவில் சீனப் பெருநிலப்பகுதி மற்றும் ஹாங்காங் பங்கு பத்திரங்களை வாங்குவதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

சீனாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சூழ்நிலையில் 2023ம் ஆண்டு மேலதிக சீன வாடிக்கையாளர்களின் மூலதனம், மீண்டும் பங்கு சந்தைக்கு வரும் என்று சொத்து மேலாண்மை நிறுவனமான Hywinவின் தலைமை நிதி அதிகாரி லோரன்ஸ் தெரிவித்தார்.