அமெரிக்கா பலூன் மூலம் அரசியல் விளையாட்டு
2023-02-19 18:34:49

அமெரிக்காவில் அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்ட 3 பொருட்கள் சீனாவுடன் தொடர்புடையவை என்பதற்குச்  சான்றுகள் கிடைக்கவில்லை. அமெரிக்கா சீனாவுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளும். ஆனால், சீனாவின் பலுனைச் சுட்டு வீழ்த்தியதற்கு அமெரிக்கா மன்னிப்பு கோராது என்று அமெரிக்க தலைவர்  அண்மையில் தெரிவித்தார்.

நிர்பந்தங்களைத் தளர்த்து இப்பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையை அமெரிக்கா தேடியதோடு, சீனாவின் மீதான கடுமையான அரசியல் கருத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த முரணான கருத்து பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

சீனாவின் ஆக்கப்பணி நோக்கத்திற்கான ஆளில்லாத வான்கப்பல், தடுக்கமுடியாத வழி தவறி நிலையில் அமெரிக்காவின் வான் பகுதியில் நுழைந்தது என்று சீனா பலமுறையில் தெரிவித்த போதிலும், உள்நாட்டு அரசியல் போட்டியின் காரணத்தால், இதனை அரசியல் நிகழ்வாக அமெரிக்கா மாற்றியது.

சர்வதேச சட்ட விதிகள் அல்லது சர்வதேச பழக்க வழக்கங்களைப் பார்த்தாலும், இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் அளவுக்கு மீறியது குறிப்பிடத்தக்கது.