59ஆவது மியுனிச் பாதுகாப்பு மாநாட்டில் வாங் யீயின் உரை
2023-02-19 16:57:41

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் இயக்குநருமான வாங் யீ, பிப்ரவரி 18ஆம் நாள் ஜெர்மனியில் நடைபெற்ற 59ஆவது மியுனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, மேலும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மேலும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவது என்பது, பல்வேறு நாட்டு மக்களின் வலுவான ஆர்வமாகும். பல்வேறு நாடுகளின் பொது பொறுப்பும், காலம் முன்னேறி வளர்வதற்கான சரியான திசையும் ஆகும். இதற்காக, பல்வேறு நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிப்பது, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் அமைதியான முறையில் சர்ச்சைகளைத் தீர்ப்பது ஆகியவற்றில் நிலைத்து நிற்க வேண்டும். ஐ.நா. சாசனம் மற்றும் கோட்பாடுகளைப் பின்பற்றி, வளர்ச்சியின் பங்கிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வாங் யீ குறிப்பிட்டார்.

மேலும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவது, சீனாவின் மாறாத குறிக்கோளாகும். அமைதியான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் சீனா, மேலதிக நாடுகளை ஒன்றிணைத்து, இப்பாதையில் முன்னேறி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

உக்ரைன் பிரச்சினை, சீன-அமெரிக்க உறவு, தைவான் பிரச்சினை ஆகியவை தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

தவிரவும், உக்ரைன் நெருக்கடியை அரசியல் முறையில் தீர்ப்பதற்கான சீனாவின் நிலைப்பாட்டை சீனா வெளியிட உள்ளது. அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவான பக்கத்தில் சீனா தொடர்ந்து நிற்கும். மேலும், தற்போதைய பாதுகாப்பு நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பயனுள்ள நடவடிக்கைகளை முன்வைக்கும் விதம், உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பு பற்றிய கருத்தாக்க ஆவணத்தை சீனா வெளியிட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.