© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பிப்ரவரி 19ஆம் நாள் கிடைத்த தகவலின்படி, சர்வதேச மின் தொழில் நுட்ப ஆணையத்திடம் சீனா முன்வைத்த சர்வதேச தர நிர்ணய ஆலோசனை ஒன்றை உலகளவில் இந்த ஆணையத்தின் உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொண்டுள்ளன. இதற்கான சர்வதேசப் பணிக் குழு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இருப்புப்பாதை மின்மயமாக்கத் தொழில் நுட்பத் துறையில் சர்வதேச தர நிர்ணயம் சீனாவின் தலைமையில் உகுக்கப்படுவது இதுவே முதன்முறை. இதற்கான சர்வதேசப் பணிக் குழுவுக்குத் தலைமை தாங்கும் சீனா, இத்தர நிர்ணயத்தை வரையறை செய்யும் விதம், வரும் 3 ஆண்டுகளில், கனடா, பிரான்சு, பிரிட்டன், ஜப்பான், ரஷியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.