குடிநீர் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் அமெரிக்கா நடவடிக்கை
2023-02-20 15:43:44

அமெரிக்காவின் ஒஹியோ நதியில் வேதியியல் மாசுபாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவ்வூர் மக்கள் மாசுபட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் சின்சினாட்டி நகரின் குடிநீர் ஆலை ஒஹியோ நதிக்கு அருகிலுள்ள நீர் எடுப்பு அமைப்பைத் தற்காலிகமாக நிறுத்தி, ஏற்கனவே சேமித்து வைத்துள்ள நீரை வழங்கி வருவதாக  உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் 18ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளது.

 ஒஹியோ மாநிலத்துக்குப் பக்கத்தில் உள்ள கென்டகி மற்றும் மேற்கு வர்ஜீனியா மாநிலங்களும் ஒஹியோ நதியிலுள்ள நீர் எடுப்பை மூடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.