அமெரிக்காவில் குழந்தை ஊழியர் அதிகரிப்பு
2023-02-27 17:09:09

நியூயார்க் டைம்ஸ் நாளேடு 25ஆம் நாள் வெளியிட்ட ஒரு புலனாய்வு அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவில் குழந்தை ஊழியர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது. 2022ம் ஆண்டில் அமெரிக்காவில் நுழைந்த காப்பாளர் இல்லாத பதின் வயதினர்களின் எண்ணிக்கை, 1.3 இலட்சத்தை எட்டி, 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிடுகையில், 3 மடங்காக உள்ளது. இவர்கள், குழந்தை ஊழியர் தொடர்பான சட்டத்தை மீறிய பணிகளைப் புரிந்து வருகின்றனர்.

குழந்தை ஊழிர்கள் முழு அமெரிக்காவின் பல்வேறு துறைகளின் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விலங்குகளைக் கொல்லும் இடத்தில் அபாயமான துப்புரவு பணி, வாகன உதிரிப்பாகங்களின் தயாரிப்பு முதலிய பணிகள், இவற்றில் அடங்குவது குறிப்பிடத்தக்கது.