வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க மேலதிக நடவடிக்கைகள் எடுக்கும் சீனா
2023-03-03 11:50:02

வணிகத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவது குறித்து சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் மார்ச் 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்தியது. இக்கூட்டத்தில், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, தாராள வர்த்தகக் கூட்டாளிகளை அதிகரிப்பது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை உள்ளிட்டவை தொடர்பான கேள்விகளுக்கு வணிக அமைச்சகத்தின் பொறுப்பாளர்கள் பதிலளித்தனர். அப்போது, சீனாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பது, வெளிநாடுகளில் சீன வணிகச் சூழல் பற்றி பரப்புரை செய்வது ஆகிய இரு துறைகளில் சீனா முயற்சி மேற்கொள்வதோடு, எண்ணியல் பொருளாதாரக் கூட்டுறவு உடன்படிக்கையில் இணைவது உள்பட துறைகளில் முன்னேற்றம் அடையவும் பாடுபடும் என்று தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு சீனாவில் முதலீடு செய்வதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கையை சீன வணிக அமைச்சகம் முதன்முறையாக நடத்த உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டின் இணைப்புக்கு சிறந்த தளம் மற்றும் பாலத்தை உருவாக்குவோம் என்று வணிக அமைச்சர் வாங் வென்டாவ் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச வர்த்தக விதிமுறையின்படி, அதிக அளவிலான உயர் நிலை திறப்பை முன்னேற்றவும் வணிக அமைச்சகம் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

தவிரவும், பசிபிக் கடந்த கூட்டுறவுக்கான விரிவான மற்றும் முன்னேறிய உடன்படிக்கை, எண்ணியல் பொருளாதாரக் கூட்டுறவு உடன்படிக்கை ஆகியவற்றில் இணையும் போக்கினை சீனா இவ்வாண்டில் தொடர்ந்து முன்னேற்றுவதோடு, உலகிற்கான உயர்தர தாராள வர்த்தக வலை அமைப்பையும் விரிவாக்கும் என்று துணை வணிக அமைச்சர் வாங் ஷொவ்வென் தெரிவித்தார்.