நைஜீரிய அரசுத தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டினுபுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2023-03-05 11:51:52

நைஜீரிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போலா டினுபுவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-நைஜீரிய உறவின் வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன் என்றும், இரு நாட்டு நெடுநோக்குக் கூட்டுறவைப் புதிய நிலைக்குக் கொண்டு வரும் வகையில், அரசுத் தலைவர் டினுபுடன் இணைந்து கூட்டாகப் பணியாற்ற விரும்புகிறேன் என்றும் சுட்டிக்காட்டினார்.