வெங்காய விலை – விவசாயிகள் பேரணி நிறுத்தம்
2023-03-19 17:16:27

மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காய விலை தொடர்பாக விவாசியகள் மேற்கொள்ளவிருந்த பேரணி நிறுத்தப்படுவதாக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் கவனத்தை ஈர்க்கும் விதம் வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி விவசாயிகளின் பேரணி புறப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் ஆலோசிக்கப்படும் என்ற உறுதியை அரசு அளித்ததைத் தொடர்ந்து பேரணியை நிறுத்த முடிவெடுத்ததாக விவசாயிகள் சங்கத் தலைவர் கவித் தெரிவித்தார்.

அரசு எடுக்கும் முடிவுகள் கிராமங்கள் மற்றும் தாலூக்கா பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.