சீனத் தலைமையமைச்சர் மற்றும் பிரேசில் அரசுத் தலைவர் சந்திப்பு
2023-04-15 16:46:21

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் பெய்ஜிங்கில் பிரேசில் அரசுத் தலைவர் லுலா டா சில்வாவை 14ஆம் நாள் பிற்பகல் சந்தித்துரையாடினார்.

லீச்சியாங் கூறுகையில், பிரேசிலுடன் இணைந்து, இரு நாடுகளுக்கிடையேயான பன்முக மற்றும் உயர் நிலை ஒத்துழைப்புகளை புதிய கட்டத்துக்கு முன்னெடுக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார். மேலும், சீனாவின் தரமான வளர்ச்சி, சீன-பிரேசில் ஒத்துழைப்புக்கு மேலும் அதிகமான மற்றும் பரந்த வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லுலா கூறுகையில், பிரேசில் சீனாவுடனான உறவில் உயர்வாக கவனம் செலுத்தி வருகின்றது. மீண்டும் அரசுத் தலைவராக பதவி ஏற்ற பின், அமெரிக்க கண்ட நாடுகளுக்கு வெளியே, பயணம் மேற்கொண்ட முதலாவது நாடு சீனா ஆகும் என்று தெரிவித்தார். மேலும், அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், வேளாண்மை, கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு, நிலையான வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் சீனாவுடனான ஒத்துழைப்பை விரிவாக்க பிரேசில் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.