133ஆவது சீன இறக்குமதி ஏற்றுமதிப் பொருட்காட்சி துவக்கம்
2023-04-16 17:19:38

133ஆவது சீன இறக்குமதி ஏற்றுமதிப் பொருட்காட்சி ஏப்ரல் 15ஆம் நாள் காலை குவாங்சோ மாநகரில் துவங்கியது. ஏப்ரல் 15முதல் மே 5ஆம் நாள் வரை நடைபெறும் நடப்புப் பொருட்காட்சி வரலாற்றில் மிகப் பெரிய கண்காட்சியாக விளங்குகிறது. கண்காட்சிப் பரப்பளவும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் புதிய பதிவை உருவாக்கின.

3ஆண்டுகளுக்குப் பின் சீன இறக்குமதி ஏற்றுமதிப் பொருட்காட்சி நேரடி வழியாக மீண்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நடப்புப் பொருட்காட்சியில் நேரடி வழியாக பங்கேற்கும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 34ஆயிரத்துக்கும் அதிகமாகும். அவற்றில் சுமார் 9000 தொழில்நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் முதன்முறையாகப் பங்கேற்றுள்ளன. மேலும், 39ஆயிரத்து 281 தொழில்நிறுவனங்கள் இணையம் வழியாகப் பங்கேற்றுள்ளன.