அமெரிக்க அலபாமாவில் துப்பாக்கி சூடு சம்பவம்
2023-04-17 18:32:59

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் டேடெவில்லி நகரில் 15ஆம் நாள் இரவு நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில், 4பேர் உயிரிழந்தனர், 28பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, துப்பாக்கி வன்முறையைத் தடுக்க இரு கட்சிகளும் ஒத்துழைப்பு மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.