இந்தியாவின் மொத்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 1.34 விழுக்காடு குறைவு!
2023-04-18 14:13:54

இந்தியாவின் மொத்த விற்பனை விலைக் குறியீடு, மார்ச் மாதத்தில் 1.34 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று நாட்டின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2020 முதல் மார்ச் மாதத்தில் இந்தியாவின் மொத்த விற்பனை விலைக் குறியீடு, அதன் மெதுவான மட்டத்தில் இருந்து  உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொத்த விற்பனை பணவீக்கம், மொத்தச் சந்தையில் விலைகளின் குறிகாட்டியாக விளங்குகிறது. இது முக்கியமாக, உலகளவில் பொருட்களின் விலைகளில், கூர்மையான உயர்வு அல்லது சரிவினால்  உயர்கிறது அல்லது குறைகிறது.