ஐ.நா அதிகாரிகளை அமெரிக்கா ஒட்டுக்கேட்ட சம்பவம் பற்றி ஐ.நா கவலை
2023-04-19 15:36:12

ஐ.நா தலைமைச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஏப்ரல் 18ஆம் நாள் கூறுகையில், ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் மற்றும் பிற உயர் நிலை அதிகாரிகளின் பரிமாற்றம் அமெரிக்க அரசால் ஒட்டுக் கேட்ட சம்பவம் குறித்து, அமெரிக்காவிடம் ஐ.நா அதிகாரப்பூர்வமாக கவலை தெரிவித்துள்ளது என்றார்.

ஐ.நா. சாசனம், ஐ.நாவின் சலுகைகள் மற்றும் விலக்குரிமைக்கான ஐ.நாவின் பொது ஒப்பந்தம் ஆகியவற்றிலுள்ள அமெரிக்காவின் கடப்பாடுகளுக்கு இச்செயல் புறம்பானது என அமெரிக்காவிடம் ஐ.நா தெளிவாகத் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.