20ஆவது சீனத் திபெத் மலையேற்ற மாநாடு
2023-04-20 11:39:33

20ஆவது சீனத் திபெத் மலையேற்ற மாநாடு ஏப்ரல் 28ஆம் நாள் முதல் ஜுன் 23ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் விளையாட்டுப் பணியகமும், லாசா நகர் மக்கள் அரசாங்கமும் இம்மாநாட்டைக் கூட்டாக நடத்தும்.

இம்மாநாட்டின் போது, லோவுதூய் சிகர மலையேற்றச் சாகச நடவடிக்கை, வெளிப்புற நடைப் பயண நடவடிக்கை, இயற்கை செங்குத்தான பாறை ஏறுதல் போட்டி, சியூகுலா சிகர ஆஃப்-ரோட் மிதிவண்டி சவால் போட்டி, திபெத் தன்னாட்சிப் பிரதேச விளையாட்டுத் தொழில்துறைப் பரிமாற்ற நிகழ்ச்சி முதலிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும், இக்காலத்தில் சீன மலை ஏறுதல் வெளிப்புற விளையாட்டுக் கூட்டணியை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.