எல்லை கடந்த மின்னணு வணிக அலுவலின் வளர்ச்சி
2023-04-24 11:01:07

இவ்வாண்டின் முதல் காலாண்டில் எல்லை கடந்த மின்னணு வணிக அலுவல் விரைவான வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகின்றது. அடுத்த கட்டத்தில் அரசு வாரியங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதிய முன்பதிவுப் படிவங்களைப் பெற்று, வெளிநாட்டுச் சந்தையை விரிவாக்க தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்யும் என்று சீன வணிக அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.  

இதனிடையே, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளில் சந்தை விரிவாக்கத்தில் சீனத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களை முக்கியமாகத் தீர்த்து, ஆதரவுகளையும் வசதிகளையும் வழங்க வேண்டும் என்று சீனத் துணை வணிக அமைச்சர் வாங் ஷோ வென் தெரிவித்தார்.

எல்லை கடந்த மின்னணு வணிக அலுவல், சில்லறை விற்பனை இறக்குமதியில் ஆக்கப்பூர்வப் பங்காற்றி வருகின்றது. சீனா தனக்குத் தேவைப்படும் எரிசக்தி வள பொருட்கள், விவசாய பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் முதலியவற்றின் இறக்குமதியை அதிகரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.