திபெத்தில் மேம்பட்டு வரும் 5ஜி இணையச் சேவை
2023-04-26 16:32:03

2023ஆம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் முதலாவது 5ஜி பிளாஸ் தொழிற்துறை இணையம் பற்றிய கருத்தரங்கு மற்றும் தொழிற்துறை இணையம் முன்னேற்ற மாநாடு ஏப்ரல் 25ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது. இதில் கிடைத்த தகவலின்படி, மார்ச் மாதம் வரை, திபெத்தில் 9508 5ஜி அடிப்படை நிலையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 5ஜி இணைய பயனர்களின் எண்ணிக்கை 10.27 லட்சமாகும். அங்குள்ள மாவட்ட நிலை பகுதிகளின் மைய நகரப்புறங்களிலும், முக்கிய வட்டங்கள் மற்றும் நகரங்களிலும் 5ஜி இணையச் சேவை பரவலாக்கப்பட்டுள்ளது.

5ஜி மற்றும் தொழில் பயன்பாட்டுத் திட்டங்களை முன்னேற்றி வரும் திபெத்தில், தற்போது மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல தொழில்களுடன் தொடர்பான 17 முக்கிய திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூரின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் உயர்தர வளர்ச்சிக்கும் பல்வேறு தொழில்களின் எண்ணியல் மாற்றத்துக்கும் துணைபுரியும் விதம், இவ்வாண்டில் 2300க்கும் மேற்பட்ட 5ஜி அடிப்படை நிலையங்கள் கட்டமைக்கப்பட உள்ளன.

மேலும், எதிர்காலத்தில் திபெத்திலுள்ள 5ஜி இணையக் கட்டுமானம் திட்டப்படி ஒழுங்கான முறையில் முன்னேற்றப்பட்டு, போக்குவரத்து மையங்கள், பெரிய விளையாட்டு அரங்குகள், காட்சிதலங்கள் உள்ளிட்டவற்றில் 5ஜி இணையச் சேவை வலுப்படுத்தப்படும்.