பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் பாராட்டிய பாஹ்
2023-05-20 17:51:21

சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் அமைப்புக் குழு தலைவர் பாஹ் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளிக்கையில், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார். மேலும், விளையாட்டு என்பது  அரசியல் கடந்த ஒன்றாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர்,  ஒலிம்பிக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தற்போது சர்வதேச ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழு, மின்னணு விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறது என்றும் தெரிவித்தார்.

தவிரவும், சீனாவின் பொது மக்கள் உடல் பயிற்சித் திட்டத்தைப் பாராட்டிய பாஹ், ஹாங்சோவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி மீதான தன்னுடைய எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.