உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இயக்காற்றலை ஊட்டும் ஆர்சிஇபி உடன்படிக்கை
2023-06-02 16:52:15

பிலிப்பைன்ஸில் ஆர்சிஇபி உடன்படிக்கையின் நடைமுறையாக்கம், இவ்வுடன்படிக்கை அதன் 15 உறுப்பு நாடுகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளதைக் குறிக்கிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் ஜுன் 2ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், ஆர்சிஇபி உடன்படிக்கை கிழக்காசிய பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டில் முக்கிய மைல் கல் என்று குறிப்பிட்டார். மேலும், பலதரப்பு வர்த்தக முறைமைக்கான இந்த 15 நாடுகளின் ஆதரவையும் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் உயர்நிலை பொருளாதாரக் கூட்டாளி உறவின் முன்னேற்றத்தில் அவற்றின் முயற்சியையும் இந்த உடன்படிக்கையின் பன்முக நடைமுறையாக்கம் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, இவ்வுடன்படிக்கையை சீராக நடைமுறைப்படுத்தி, பிரதேசப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டை ஆழமாக்குவதற்கும், பிரதேச மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மேலும் பெரும் இயக்காற்றலை வழங்க சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.