சீன-அமெரிக்க தூதாண்மை அதிகாரிகள் பெய்ஜிங்கில் சந்திப்பு
2023-06-06 10:25:21

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசிய-பசிபிக் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் டேனியல் ஜோசப் கிரிடன்பிரிங்க், வெள்ளை மாளிகைத் தேசிய பாதுகாப்புக் குழுவின் சீன விவகாரங்களுக்கான இயக்குநர் சாரா பெரன் ஆகியோர் 5ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொண்டனர். சீன துணை வெளியுறவு அமைச்சர் மாச்சௌச்சு, வெளியுறவு அமைச்சகத்தின் வட அமெரிக்க மற்றும் பெருங்கடல் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் யாங்டௌ ஆகியோர் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த நவம்பரில் பாலி தீவு உச்சிமாநாட்டின் போது இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துக்களின்படி, சீன-அமெரிக்க உறவை முன்னேற்றுவது, கருத்து வேற்றுமைகளை உரிய முறையில் கையாள்வது முதலியன குறித்து இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான பரிமாற்றத்தை மேற்கொண்டனர். தைவான் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி தனது நிலைப்பாட்டைச் சீனத் தரப்பு உறுதியாக வெளிப்படுத்தியது. மேலும் பரஸ்பர தொடர்வை நிலைநிறுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.