சீனாவின் பொருட்காட்சிகளில் இலங்கை வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு
2023-08-15 09:58:57

இலங்கை வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னண்டோ அந்நாட்டின் சார்பில் ஆகஸ்ட் 16முதல் 20ஆம் நாள் வரை நடைபெறவுள்ள 7ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி மற்றும் 27ஆவது சீன குய்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சியில் பங்கேற்கவுள்ளார்.

மேலும், இலங்கையின் 58 தொழில்நிறுவனங்களைச் சேர்ந்த 75 வணிக தலைவர்களும் செயல் அதிகாரிகளும் இவ்விரு பொருட்காட்சியில் பங்கேற்கவுள்ளனர் என்று இலங்கை வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.