சீனப் பொருளாதாரத்தில் பணவாட்டம் இல்லை
2023-08-15 16:23:33

2023ஆம் ஆண்டின் ஜூலை மாத தேசியப் பொருளாதாரச் செயல்பாட்டு நிலைமை குறித்து சீன அரசவையின் தகவல் அலுவலகம் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளரும் தேசிய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த புள்ளிவிபரப் பிரிவின் தலைவருமான ஃபூ லிங்குய் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், தற்போது சீனப் பொருளாதாரத்தில் பணவாட்டம் இல்லை என்றும், வரும் காலத்தில் இருக்காது என்றும் கூறினார். ஒட்டுமொத்த பொருளாதாரச் செயல்பாட்டின் கண்ணோட்டத்தில் பொருளாதார செயல்பாடு ஒட்டுமொத்தமாக மீட்சியடைந்து வருகிறது. நாணய நிலைமைகளின் கண்ணோட்டத்தில், சந்தை பணப்புழக்கம் பொதுவாக ஏராளமாக உள்ளது. விலைவாசியைப் பொறுத்தவரை, இந்த மாதத்தின் நுகர்வு விலை குறியீட்டு எண், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட குறைவாகும். ஆனால், கடந்த ஜூன் திங்களை விட, இக்குறியீட்டு எண் அதிகம்.