தி எகனாமிஸ்ட்:சீனா மீதான அமெரிக்காவின் கொள்கைக்கு பயனில்லை
2023-08-18 14:49:04

பிரிட்டனின் தி எகனாமிஸ்ட் இதழ் அண்மையில் சீனா மீதான ஜோ பைடன் கொள்கை பயனில்லை என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கட்டுப்படாடுகளுக்கு அமெரிக்கா பெரும் விலை கொடுத்துள்ளதோடு எதிர்பார்க்கப்பட்ட பெறவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, வினியோக சங்கிலி மேலும் குழப்பமாகி, வெளிப்படையற்றதாகவும் மாற்றப்பட்டுள்ளது. வினியோக சங்கிலியில் சீனாவின் தலைமை தகுநிலை பலவீனமாகவில்லை என்று இக்கட்டுரையில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

உண்மையில், சீனாவின் மீதான சார்பளவை அமெரிக்கா மாற்றவில்லை. வளர்ச்சி அடையாத நாடுகளைப் பொறுத்தவரை, சீனாவின் முதலீடுகள் மற்றும் இடைநிலை பொருட்களை ஏற்றுக்கொண்டு, அமெரிக்காவுக்கு உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வது, வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஊற்றுமூலமாக விளங்குகிறது.