ஈரான் வெளியுறவு அமைச்சரின் சௌதி அரேபியப் பயணம்
2023-08-18 10:56:15

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் 17ஆம் நாள், சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தினைச் சென்றடைந்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக 2016ஆம் ஆண்டில் இரு தூதரக உறவு துண்டிக்கப்பட்ட பிறகு, ஈரான் உயர் நிலை அதிகாரிகள் சௌதி அரேபியாவில் பயணம் மேற்கொள்வது இது முதன்முறையாகும்.