5வது சீனத் தானிய வர்த்தக மாநாடு துவக்கம்
2023-08-27 16:10:27

5வது சீனத் தானிய வர்த்தக மாநாடு ஆகஸ்டு 26ஆம் நாள் ஹேநான் மாநிலத்தின் ட்செங்சோ நகரில் துவங்கியது. நாடளவில் சுமார் 2600 தொழில் நிறுவனங்கள் இதில் பங்கெடுத்துள்ளன. தானிய உற்பத்தித் தொழிலின் உயர்தர வளர்ச்சி என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாடு, கிராம மற்றும் அடி மட்ட இடங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து, தானிய புழக்கத்தின் நவீனமயமாக்க நிலையை உயர்த்தும் நோக்கத்தை கொண்டுள்ளது.

தரமிக்க தானியம் மற்றும் எண்ணெய் விற்பனை, நடப்பு மாநாட்டின் முக்கிய அம்சமாகும்.

மேலும், 3வது சீன வறுமையிலிருந்து மீண்ட பகுதியின் தானியம் மற்றும் எண்ணெய் பொருட்காட்சி இம்மாநாட்டின்போது நடத்தப்படுகிறது. வறுமையிலிருந்து விடுபட்டுள்ள 388 மாவட்டங்களைச் சேர்ந்த 786 தொழில் நிறுவனங்கள் இதில் பங்கெடுத்துள்ளன.