சீன அதிகாரிக்கான கல்வி மற்றும் பயிற்சியின் விதி
2023-09-02 16:46:58

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஆகஸ்ட் 31ஆம் நாள் நடத்திய கூட்டத்தில், அதிகாரிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சி பணி பற்றிய விதிகள், தேசிய அதிகாரிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சி திட்டம் பற்றி பரிசீலனை செய்யப்பட்டன. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

உயர் தர அதிகாரிகள் குழுவை உருவாக்குவதற்கு அடிப்படையான நெடுநோக்கு தன்மை வாய்ந்த திட்டப்பணி, அதிகாரிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சி ஆகும். சீன தனிச்சிறப்புடைய சோஷலிசத்தைக் கட்டியமைப்பதிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமானத்திலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஷி ச்சின்பிங் கூறினார்.