ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு: மாபெரும் சாதனை இது
2023-09-12 17:12:16

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சீனவியல் அறிஞர் கொலின் மேக்கராஸ் 2014ஆம் ஆண்டு சீன அரசின் நட்பு விருது பெற்றார். 1964ஆம் ஆண்டு, பேராசிரியர் மேக்கராஸ் முதன்முறையாக சீனாவுக்கு வந்து பாடம் வழங்கத் துவங்கினார். அரை நூற்றாண்டில், அவர் 60க்கும் அதிகமான முறை சீனாவுக்கு வந்துள்ளார். சீனாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களை நேரில் அனுபவித்துள்ளதோடு, ஆஸ்திரேலியா மற்றும் உலகத்துக்கு உண்மையான சீனா பற்றி அறிமுகப்படுத்த விடா முயற்சி மேற்கொண்டார். அவரின் முயற்சி மற்றும் உற்சாகத்தால், இரு நாட்டு மக்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நட்புறவுக்கான பாலம் ஒன்றைக் கட்டியமைத்தார் என்று  சீன அரசுத் தலைவர்  ஷிச்சின்பிங் 2014ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சொற்பொழிவு ஆற்றியபோது கூறினார்.

1965, 2018 என இரு வேறு காலங்களில் யன் ஆன்னில் 2 முறை பயணித்துள்ளேன். ஷிச்சின்பிங் பணி புரிந்த இடத்துக்குச் சென்ற அங்குள்ள வாசிகளுடன் உரையாடினேன் என்று மேக்கராஸ் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், யன் ஆன்னிலுள்ள மக்களின் வாழ்க்கை பெரிதும் மேம்பட்டுள்ளது. முன்பை விட, அவர்கள் மேலும் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். மகிழ்ச்சியின் வரையறை என்ன என்ன எனக்குத் தெரியில்லை. எனது பார்வையில், இது தான் மகிழ்ச்சி. தீவிர வறுமையை ஒழிப்பது மாபெரும் சாதனையாகும் என நான் கருதுகிறேன். இதனை நனவாக்க, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அதிக முயற்சி செய்துள்ளதாக நம்புகிறேன். சிறந்த தலைவரின் பங்களிப்பு அதன் திறவுகோல். தற்போது, ஷிச்சின்பிங்கின் தலைமைத்திறன் மீது சீன மக்கள் மேலும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.