விண்வெளித் துறையில் அன்னிய முதலீடு தாராளமயமாக்கம் – இந்தியா
2024-02-23 19:17:51

இந்தியாவின் விண்வெளித் துறையில் வெளிநாட்டு முதலீட்டை தாராளமயமாக்கும் கொள்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. வேலைவாய்ப்புகள் உருவாக்கம், புதிய தொழில்நுட்பத்தை தழுவுதல், விண்வெளித் துறையில் தன்னிறைவு அடைதல் உள்ளிட்டவற்றுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விண்வெளித் துறையிலான அன்னிய முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.