இந்தியாவில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளுக்கு 24 கோடி அமெரிக்க டாலர் கடன்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்
2024-07-18 17:43:24

இந்தியாவில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளுக்கு 24.05 கோடி அமெரிக்க டாலர் கடன்கள் வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி அமைப்புகள் மற்றும் பயனர்களுக்கு கடன்கள் வழங்கப்படும்.

தூய்மையான தொழில்நுட்ப நிதியில் இருந்து 9.05 கோடி டாலர்களை எஸ்பிஐ வங்கிக்கு வழங்குவதாகவும், நபார்டுக்கு 15 கோடி டாலர்களைப் வழங்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுதல் மற்றும் தொழில்நுட்ப செயல்பாட்டு சுமையைக் குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்த மின் விநியோக முறைக்கு பயனளிக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.