ஜூலை தீவிர வெப்பத்தால் உலகின் பத்து கோடிக்கணக்கானோருக்குப் பாதிப்பு
2024-08-08 16:17:33

ஜூலை மாதத்தில் தீவிர வெப்பம் உலகின் பத்து கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து மனித சமூகத்தில் தொடர் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது என்று உலக வானிலை அமைப்பு 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இவ்வமைப்பு மேற்கோள் காட்டிய தரவுகளின்படி, ஆசிய நாடுகளிடையில் ஜப்பானில் ஜூலை மாத சராசரி தட்பவெப்பம் 1898ஆம் ஆண்டு பதிவானது முதல் இதுவரை மிக அதிகமான பதிவை உருவாக்கியது. அது, கடந்த ஆண்டின் பதிவைத் தாண்டி ஆகஸ்ட் மாதத்திலும் இந்த கடும் வெப்பம் தொடருமென மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவும் ஜூலையில் வரலாற்றில் பதிவான 2ஆவது அதிகபட்ச வெப்பத்தை எதிர்கொண்டது.

மத்திய தரை கடல் மற்றும் பால்கன் தீபகற்பத்தின் பல இடங்கள் ஜூலை மாதத்தில் வெப்ப அலையினால், மக்களின் ஆரோக்கியத்தை பாதித்தத்துடன், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது என்று தரவுகளில் காட்டப்பட்டது.