சீனா ஆகஸ்ட் வெளியிட்ட நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் உற்பத்தியாளர் விலை குறியீடு பற்றிய புள்ளிவிவரங்கள்
2024-09-09 11:23:34

ஆகஸ்ட் திங்களில் சீனாவிலான நுகர்வோர் விலைக் குறியீட்டையும் (சிபிஐ)உற்பத்தியாளர் விலை குறியீட்டையும்(பிபிஐ) சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்டது.

ஆகஸ்டில், அதிக வெப்பநிலை மற்றும் மழை காரணமாக, நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த திங்களை விட உயர்ந்தது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். முந்தைய மாதத்தை விட, சிபிஐ 0.4 விழுக்காடு உயர்ந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சிபிஐ 0.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சந்தை தேவை  பற்றாக்குறை மற்றும் சில சர்வதேச பொருட்களின் விலைகளின் வீழ்ச்சி காரணமாக, முந்தைய மாதத்தை விட, பிபிஐ 0.7 விழுகாடு குறைந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கண்ணோட்டத்தில், பிபிஐ 1.8 விழுக்காடு குறைந்தது.