செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் லீ ச்சியாங் பயணம்
2024-09-09 18:57:55

செளதி அரேபிய பட்டத்து இளவரசரும் தலைமையமைச்சருமான முகமது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அரசுத் தலைவரும், தலைமையமைச்சருமான முகமது ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 10 முதல் 13ஆம் நாள் வரை செளதி அரேபியாவில் நடைபெறும் சீன-செளதி அரேபிய உயர் நிலை கூட்டுக் குழுவின் 4ஆவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெள நிங் அம்மையார் 9ஆம் நாள் தெரிவித்தார்.