சீனா-ஜாம்பியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆம் ஆண்டு நிறைவு
2024-10-29 20:29:55

சீனாவுக்கும் ஜாம்பியாவுக்கும் இடையேயான தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜாம்பியா அரசுத் தலைவர் ஹிச்சிலேமா ஆகிய இருவரும் ஒருவர்க்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

சீன-ஜாம்பிய உறவுக்கு உயர்ந்த முக்கியத்துவம் அளிப்பதாக கூறிய ஷிச்சின்பிங், 60ஆம் ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, பாரம்பரிய நட்பை வெளிக்கொணர்ந்து, ஒன்றுக்கொன்று உறுதியாக ஆதரித்து, இரு நாட்டு பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவை வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

ஹிச்சிலேமா கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை உள்ளிட்ட முக்கிய முன்னெடுப்புகளை தொடர்ந்து ஆதரிப்பதோடு, ஜாம்பியா சீனாவுடன் இணைந்து மனிதகுலத்திற்கான பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்தார்.