© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனச் சங்கம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் திங்களில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி குறியீடு 89 ஆகும். இது, செப்டம்பர் திங்களில் இருந்ததை காட்டிலும் 0.3 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம். ஒட்டுமொத்த பொருளாதார குறியீடு, செலவு குறியீடு, உழைப்பு ஆற்றல் குறியீடு முதலியவை நிதானமாக உயர்ந்து வருகிறது. சந்தையின் குறியீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் இயக்கம் மேம்பட்டு வருவதை இத்தரவுகள் காட்டியுள்ளன.
இச்சங்கத்தின் தொடர்புடைய ஆய்வின்படி, தேசிய பொருளாதாரத்தின் 8 தொழில்களில் 6 தொழில்களின் சந்தை குறியீடுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இதில், சமூக சேவை தொழில், வீட்டு நிலச் சொத்து மற்றும் போக்குவரத்துச் சந்தையின் குறியீடுகள் செப்டம்பர் திங்களில் இருந்ததை விட முறையே, 1.0, 0.7 மற்றும் 0.6 விழுக்காட்டு புள்ளிகள் உயர்ந்துள்ளன.