சீன-ரஷியாவின் 19ஆவது ஆண்டு நெடுநோக்கு பாதுகாப்பு கலந்தாய்வு
2024-11-11 19:48:34

ரஷிய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் செர்ஜி ஷோய்கு நவம்பர் 11ஆம் நாள் முதல் 15ஆம் நாள் வரை சீனாவுக்கு வந்து சீன-ரஷியாவின் 19ஆவது சுற்று நெடுநோக்கு பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் சீனா-ரஷியா சட்ட அமலாக்க பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைப்பு முறையின் 9ஆவது கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் 11ஆம் நாள் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், நவம்பர் 12ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஷோய்குடன் ஆண்டு நெடுநோக்குப் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தவுள்ளார். இரு தரப்பு உறவு மற்றும் இரு நாட்டு நெடுநோக்குப் பாதுகாப்பு நலனுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆழமாக பரிமாறிக் கொண்டு, நிலைப்பாட்டை ஒருங்கிணைந்து, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை வலுப்படுத்தவுள்ளனர் என்றார்.