© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபரில் சீனாவின் மின்னணு வணிக சரக்குப் புழக்கத் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. இச்சேவை பெருமளவில் உயர்ந்துள்ளது.
அக்டோபரில் மின்னணு வணிக சரக்குப் புழக்க குறியீடு 115 புள்ளிகள் ஆகும். இது, செப்டம்பரில் இருந்ததை விட 0.6 புள்ளி அதிகரித்துள்ளது. மின்னணு வணிக மொத்த சரக்குப் புழக்க குறியீடு 133.7 புள்ளிகள் ஆகும். இது, செப்டம்பரில் இருந்ததை விட 2.5 புள்ளிகள் உயர்ந்து, கடந்த 5 ஆண்டுகாலத்தில் மிக உயர்வான நிலையில் உள்ளது.