• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய்: 'வாய்தான்' பகுதி
  2016-06-17 18:56:08  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹுவாங் பு ஆற்றங்கரையைச் சேர்ந்த வாய்தான் எனும் பகுதி, மிகவும் புகழ்பெற்றது. ஆங்கிலத்தில் தே பன்ட் என அது அழைக்கப்படுகிறது. 1846ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வெய்தான் பகுதியில், நாணய நிறுவனங்களின் கட்டிடங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஷாங்காய் மாநகரின் ஏற்றத்தாழ்வைப் பதிவு செய்த இந்தப் பகுதி, இம்மாநகரின் மையமாகும். விதவிதமான எழில்மிக்க காட்சிகளை அது மக்களுக்கு அளித்து வருகிறது. மேலும், வசதியான போக்குவரத்து, சிறப்பான பசுமைமயமாக்கம், அருமையான நீரூற்று முதலியவை இப்பகுதியின் ஈர்ப்பாற்றலை அதிகரித்துள்ளன.

வாய்தான், ஷாங்காயின் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அது, பன்னாட்டு கட்டிடக் கலைக் கண்காட்சி எனப் போற்றப்படுகிறது. ரோமானிய(roman), காதிக்(gothic), பாரொக்(baroque)ஆகிய பாணிகளுடைய கட்டிடங்கள் வெய்தான் பகுதியின் ஈர்ப்பாற்றலை மேலும் அதிகரித்துள்ளன. வேறுபட்ட பாணி, பின்னணி மற்றும் செயல்திறனில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள், வரலாற்றைப் பதிவு செய்து, வடிவமைப்பாளரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் அதேவேளை, தன்னுடைய தனிச்சிறப்புகளையும் எடுத்துக்காட்டியுள்ளன. இந்தக் கட்டிடங்களின் வரலாறு, கட்டிடப் பாணி முதலியவை பற்றி அறிந்து கொண்டால், அவற்றின் உண்மையான அழகைக் கண்டு மகிழலாம்.

வாய்தான் பார்வையிடும் சுரங்கப் பாதை, சீனாவில் ஆற்றைக் கடந்து செல்லும் முதலாவது பயணியர் சுரங்கப் பாதையாகும். மொத்தம் 646.7 மீட்டர் நீளமுடைய இந்தச் சுரங்கப் பாதை, ஹுவாங் பு ஆற்றின் மேற்கு கரையிலுள்ள வாய்தான் பகுதியை கிழக்கு கரையிலுள்ள தொலைக்காட்சிக் கோபுரத்துடன் நெருக்கமாக இணைத்துள்ளது. இவ்விரு காட்சித்தலங்களைப் பார்வையிடும் சுற்றுலா பயணிகளுக்கு இது வசதியளித்துள்ளது. இந்தச் சுரங்கப் பாதையில் பயணித்தால் மொத்தம் 5 நிமிடங்கள் தேவைப்படும். பயணப் போக்கில், பல்வகை வடிவங்களையும் காட்சிகளையும் கண்டு ரசிக்கும் அதேவேளை, அருமையான பின்னணி இசையையும் கேட்டு களிக்கலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040