• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2ஆவது சீன-இந்திய இணையப் பேச்சுவார்த்தை
  2017-03-16 14:57:00  cri எழுத்தின் அளவு:  A A A   
2017 வெளிநாடுகளில் சீனப் புத்தாக்க நிறுவனங்களின் முதலீடு மற்றும் 2ஆவது சீன-இந்திய இணையப் பேச்சுவார்த்தை 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. வெளிநாடுகளில் சீன இணைய நிறுவனங்களின் முதலீடு, இந்தியாவின் புதிய இணைய நிறுவனங்களின் வளர்ச்சி, சீனாவின் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்நோக்கும் வாய்ப்புகளும் அறைகூவல்களும் ஆகியவை இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. சீனா, இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலான வணிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
முதலாவது சீன-இந்திய இணையப் பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு புது தில்லியில் நடைபெற்றது. இதில் உருவாக்கப்பட்ட சீன-இந்திய இணையத் தொழில் நிறுவன ஒன்றியம், இரு நாடுகளின் இணையத் துறை பரிமாற்றத்துக்குப் பெரும் முன்னேற்ற பங்கினை ஆற்றி வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டத்தின் பின்னணியில் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கும் சீன அரசு மேலதிக ஆதரவு அளித்து வருகின்றது.
2015, 2016 ஆகிய ஆண்டுகளில், சீனா மற்றும் இந்தியாவின் இணையச் சந்தைக்கான முதலீட்டுத் தொகை 270 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும் என்று சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
தற்போது உலகளவில் இணையத் துறையில் மிக அதிக சந்தை மதிப்பு கொண்ட 10 நிறுவனங்களில் 2, சீனாவின் நிறுவனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் செல்லிட இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 43 கோடியே 20 இலட்சமாகும். இணையத் துறையில் இந்தியா ஒரு மிகப் பெரிய சந்தையாகும். சீனாவுக்கான இந்தியத் துணை நிலைத் தூதர் அமிட் நராண் கூறியதாவது
தயாரிப்புத் துறையில் சீனா மற்றும் இந்தியாவின் தொழில் நிறுவனங்கள் சேர்ந்து ஈடுபட வேண்டும். எண்ணியல் மற்றும் பொலிவுறு நகரக் கட்டுமானத்தில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. எதிர்காலத்தில் இது பொருளாதாரத்தை வளர்க்கும் முக்கியப் பகுதியாகும் என்று அவர் கூறினார்.
2017ஆம் ஆண்டு இந்திய இணையத் துறையின் வளர்ச்சி தொடர்பான வெள்ளை அறிக்கை இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் இணையத் துறை மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் நடைமுறை நிலைமை இவ்வறிக்கையில் தெளிவாகவும் பன்முகங்களிலும் தொகுக்கப்பட்டது. இந்திய சந்தையில் முதலீடு செய்யும் வணிகர்களுக்கு இது துணை புரியும் என்று நம்பப்படுகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040