அமெரிக்க-தென் கொரிய ராணுவ பயிற்சி பற்றி ரஷியாவின் கருத்து
2017-08-25 11:34:56  cri

அமெரிக்காவும் தென் கொரியாவும் அல்சி சுதந்திர காப்பாளர் எனும் கூட்டு ராணுவப் பயிற்சியை 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக துவக்கின. இந்நிலையில் இது கொரியத் தீபகற்பத்தின் பதற்ற நிலைமையைத் தணிவுபடுத்துவதற்கு துணை புரியாது என்று ரஷிய வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் மாரினா சாஹாரோவா 24ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசுகையில், அமைதி முறையில் கொரியத் தீபகற்பப் பிரச்சினையைத் தீர்ப்பது, ஈடிணையற்றது என்று தெரிவித்தார். தொடர்புடைய பல்வேறு தரப்புகள் இயன்ற அளவில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததோடு, வட கொரியா அமெரிக்க-தென் கொரிய ராணுவப் பயிற்சிக்கு ராணுவ முறையில் எதிர்வினை ஆற்றக்கூடாது என்று விருப்பம் தெரிவித்தார்.

அமைதிப் பேச்சுவார்த்தையின் வளர்ச்சிப் போக்கினை மீண்டும் துவங்கினால், இப்பிரதேசத்தில் உள்ள ராணுவ நடவடிக்கையை முதலில் குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். (மீனா)