சீன-செளதி அரேபிய உற்பத்தி திறன் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு கருத்தரங்கு
2017-08-25 16:03:47  cri

சீன-செளதி அரேபிய உற்பத்தி திறன் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு கருத்தரங்கு 24ஆம் நாள் செளதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிடாவில் துவங்கியது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றியும், செளதி அரேபியாவின் 2030 விருப்பம் எனும் திட்டம் பற்றியும் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துனை தலைவர் நிங் ஜி சே இக்கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். 2016ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை முன்னேற்றி, உற்பத்தி திறன் ஒத்துழைப்பு மேற்கொள்வது பற்றிய புரிந்துணர்வு குறிப்பாணையில் சீன மற்றும் செளதி அரேபிய அரசுகள் கையொப்பமிட்ட பிறகு, உற்பத்தி திறன் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு பற்றிய முதலாவது தொகுதி 30 முக்கிய திட்டப்பணிகளை இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளன. இவற்றில் 8 திட்டப்பணிகளின் கட்டுமானம் துவங்கியுள்ளது. உற்பத்தி திறன் ஒத்துழைப்பு மூலம் உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு புதிய இயக்கு ஆற்றலை வழங்க வேண்டும் என இவ்விரு நாடுகளும் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இரு தரப்பு எரியாற்றல், அடிப்படை வசதி கட்டுமானம், அறிவியல் தொழில் நுட்பம், நாணயம் உள்ளிட்ட துறைகளின் முக்கியத் தொழில் நிறுவனங்களும், அரசு வாரியங்களின் பொறுப்பாளர்களும் ஆக சுமார் 200 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர். (மீனா)