பன்னாட்டு அணு ஆற்றல் நிறுவனத்தின் சுதந்திரத் தன்மை பேணிக்காப்பது
2017-08-27 15:40:57  cri
ஐ.நாவிலுள்ள அமெரிக்க நிரந்தர பிரதிநிதி நிக்கி ஹேலி வியானாவிலுள்ள பன்னாட்டு அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைமையகத்தைப் பார்வையிட்ட பின், 25ஆம் நாள் நியூயார்க்கில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பன்னாட்டு அணு ஆற்றல் நிறுவனத்தின் சரிப்பார்ப்புப் பணிக்கு ஈரான் முட்டுக்கட்டைகளைப் போட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹ்மத் ஜவாத் சரிஃபு பதில் அளித்துள்ளார். ஹேலியின் கூற்று, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பான பன்முக உடன்படிக்கை மற்றும் ஐ.நா பாதுகாப்பவையின் 2231ஆவது தீர்மானத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பன்னாட்டு அணு ஆற்றல் நிறுவனத்தின் தகுநிலைக்குப் புறம்பானது என்று அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச விவகாரங்களில், இந்நிறுவனத்தின் சுதந்திரம், ஈரான் அணு ஆற்றல் பிரச்சனை தொடர்பான பன்முக உடன்படிக்கையில் இடம்பெறும் தகுநிலை ஆகியவை சந்தேகிக்கப்பட முடியாததாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார். (வாணி)