• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-21 21:51:31    
தாவோர் இன பெண்பணி இருவர்

cri

தாவோர் சிறுப்பான்மை தேசிய இனம், சீனாவின் 56 தேசிய இனங்களில் மிகவும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டது. இந்த இனத்து மக்கள், துணிச்சலானவர்கள், மனமார்ந்த, நீண்டநெடும் வரலாற்றில் ஒளிமயமான தேசிய பண்பாட்டை உருவாக்கியவர்கள். தற்போதைய நவீன சோஷலிஸம் வளர்ச்சியில், தமது தேசிய இனத்தின் பண்பாட்டை பாதுகாத்து வெளிப்படுத்துவதில் அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர்.

உறை, தாவோர் இனத்தைச் சேர்ந்த கைவினை பொருள் தயாரிப்பாளர்கள் ஈடுப்பட்டுடன், கற்றுக் கொண்டு, தமது தொழில் நுட்பத்தை உயர்த்தி, தமது தேசிய இனத்தின் கைவினைக் கலைகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த பண்பாட்டு அலுவலகத்தில், காகிதக் கத்தரிப்புக் கலையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் தாவோர் இனத்தைச் சேர்ந்த கலைஞர் சூமே அம்மையாரை சந்தித்தோம். அவள், 30 வயதுக்கு மேற்பட்டவர். ஆனால் 400க்கு அதிகமான கலைப் பொருட்களை செய்துள்ளார். 1994ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டுவரை, தமது கலைப்பொருட்களுக்கு, மாவட்டம், மாநிலம், நாடு ஆகிய நிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. 2004ம் ஆண்டு சீனாவின் மேற்கு பகுதியின் பண்பாட்டு விழாவில், அவரது கலைப் படைப்பு தேசிய தங்க பதக்கம் பெற்றது. 2005ம் ஆண்டு, சீனாவின் சியே ஹே கோப்பை என்னும் காகித கத்தரிப்புப் போட்டியில்,சிவப்புக் கொண்டை கொக்கு என்ற கதையைச் சித்திரிக்கும் கலைபப் படைப்பு, சிறப்பு பரிசு பெற்றது. நாட்டின் வெவ்வேறான வட்டாரங்களில் தமது 200க்கு அதிகமான கலை பொருட்களின் பொருட்காட்சியை அவர் நடத்தியுள்ளார்.

பெற்றுள்ள சாதனை குறித்து, அவர் அடக்கமாக இருக்கிறார். அவர் கூறியதாவது

நான் சிறப்பாக காகித கத்தரிப்புக்கலையைக் கற்றுக் கொள்ளவில்லை. சிறிய வயதில் காகித கத்தரிப்பு எனக்கு மிக பிடிக்கும். தாவோர் சிறுப்பான்மை தேசிய இனத்தின் பெண் குழந்தைகளுக்கு காகித கத்தரிப்பு மிகவும் விருப்பமானது. தாவோர் இனத்தின் மக்களின் பழக்கவழக்கங்கள் அவர்கள் செய்யும் பொருட்களில் வெளிப்படுகின்றன. உழைப்பு வாழ்க்கை, ஆடல் ஆகிய துறைகளுடன் தொடர்புடையன. குறிப்பாக மகளிர் உழைப்பு வாழ்க்கை அவர்களின் படைப்புக்களில் சித்தரிக்கப்படுகிறது.

கடந்த காலத்தில், தாவோர் தேசிய இனத்தின் ஒவ்வொரு மகளிரும் காகித கத்தரிப்புக் கலையில் ஈடுபட்டார்கள். சிறிய வயதில், விளையாட்டுப் பொரும்மைகள் இல்லாததால் பெண்கள், காகித கத்தரிப்பில் நன்றாக ஈடுபட்டார்கள். ஆனால், நடு நிலைப் பள்ளியில் கல்வி முடித்த பின், உணவு விடுதியில் பணிப் பெண்ணாகச் சேர்ந்தார். வேலை நேரம் முடிந்ததும் கத்தரிப்பில் ஈடுப்பட்டார். சில முக்கிய கலைஞர்களிடம் கற்றுக் கொண்டார். எனவே, அவருடைய தரம் உயர்ந்து 5 ஆண்டுகளுக்கு அதிகமாக உணவு விடுதியில் வேலை சென்த பின், தமது காகித கத்தரிப்பு தொழில் நுட்பத்தால், மாவட்டத்தின் பண்பாட்டு மாளிக்கையில் சேர்ந்து காகித கத்தரிப்பு மற்றும், ஓவியத்தில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். இங்கு அவருடைய ஆர்வத்திற்கு ஏற்ற பணியாக இருப்பதால் அவரது, இயல்பான திறமை முழுமையாக வெளிப்படுகிறது. இதன் விளைவாக, பல சிறந்த கலைப் படைப்புக்கள் இருவாயின.

ஆனால், கலை என்பது, ஒட்டுமொத்தமானது. பாடல், ஓவியம் முதலிய தலைசிறந்த கலைகளுடன் இணைந்து, தமது கலையறிவை செழுமைப்படுத்த வேண்டும். சூ மைய், பல்வேறு இடங்களுக்குச் சென்று, பார்வையிட்டு, தமது நிலையை உயர்த்தினார்.

இளமைத் துடிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் கூடிய து மீன் யே சீனாவின் வட கிழக்கிலுள்ள தாவோர் இனத்தின் தான்னாட்சி மாவட்டத்தில் பணியாற்றுகிறார். ஒரு சிறிய கிராம மலைபகுதியில் அவர் பிறந்தார். சிறிய வயதில், ஒரு பெரிய கருப்பு நாயுடன் விளையாடினார். மலை ஏறினார், ஆற்றில் இறங்கி மீன் பிடித்தார். சுதந்திரமான வாழ்க்கை நடத்தினார். அவர் கூறியதாவது

சிறு வயதில் இருந்த உலகத்தை, இப்போதும் நினைத்துப் பார்க்கும் போது அற்புத உலகமாக உள்ளது. ஆனால், பின் தங்கிய நிலைமை மட்டும் மாறவே இல்லை.

பெண் குழந்தைக்குக் கல்வி கற்பிப்பதில் தாவோர் இனம் மிகவும் அக்கறை செலுத்துகிறது. எனவே, சிறிய வயதில் அவர் பள்ளிக்குச் சென்று பயில முடிந்தது. அவர் கூறியதாவது

பத்தாண்டுக்கும் மேற்பட்ட அதிகமான பள்ளி வாழ்க்கை காலத்தில், நான் ஒரு முறை தோல்வி அடைந்தால் கூட இன்றைய வாழ்க்கை இல்லை. தற்போது, எனக்கு ஒரே நோக்கம். அறிவு மூலம், வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்றார்.

து மீன் யே பல்கலைகழகத்தில் கல்வி முடிந்த பின், ஊருக்கு திரும்பி 8 ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தார். பின்னர், அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று, மாவட்டத்தின் துணை தலைவரின் செயலராக மாறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது

ஊரை விரும்பினால், உலகத்தை விரும்ப முடியும். நான், ஆக்கபூர்வமான தன்னம்பிக்கையுடன் கூடிய மனப்பாங்குடன் சேர்ந்து, பணியில் நன்றாக ஈடுபட முடியும் என்றார்.

அவருடைய ஆக்கபூர்வமான முயற்சி மூலம், 2005ம் ஆண்டு ஜனவரி திங்கள், சுற்றுலா அலுவலகத்தின் துணை தலைவராக அவர் நியாமிக்கப்பட்டார். ஒரு புதிய பணியை எதிர்நோக்கி, முதலில் கற்றுக் கொள்ள விரும்பி தாமாக நூல்களைப் படித்ததோடு, மற்றவரிடமும் கேட்டறிந்தார். அவர் படிப்படியாக துறை நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி, சுற்றுலாச் சந்தையைத் திறந்து வருகிறார்.