• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

சேவல் ஆண்டு
சுருக்கம்
சீனப் புத்தாண்டு/ வசந்த விழாக் கொண்டாட்டம்
சுருக்கம்: சீனப் புத்தாண்டு ஒரு முக்கியமான சீனத் திருவிழா ஆகும். இது சீனாவின் சந்திர-சூரிய சீனப் நாட்காட்டியின் படி புத்தாண்டின் துவக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் நேரடி மொழிபெயர்ப்பு "வசந்த விழா" ஆகும். கொண்டாட்டங்கள் பாரம்பரியமாக புத்தாண்டின் முந்தைய நாள் முதல் 15-ம் நாள் வரை நடைபெறுகின்றன
கடைபிடிப்போர்: உலக நாடுகளில் வாழும் சீனர்கள்
முக்கியத்துவம்: சீனப் புத்தாண்டு; பழையன கழிந்து புதியன புகுதல்
கொண்டாட்டங்கள்: டிராகன் நடனம், சிங்க நடனம், பகிர்ந்து உண்ணுதல், பட்டாசு வெடித்தல், குழந்தைகளுக்கு பரிசு கொடுப்பது, உறவினர் மற்றும் நண்பரோடு என்றும் தொடர்பில் இருப்பதை வலியுறுத்தும் காணதல்
நாள்: 2017ஆம் ஆண்டு ஜனவரி 28ம் நாள்
சிறப்பு
  • தமிழ் நண்பர்களோடு இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • சீனாவின் பெய்ஜிங், தியன்ஜின், டாலியன் ஆகிய நகரங்களில் வாழும் தமிழ் நண்பர்களோடு, சீன வானொலி தமிழ்ப் பிரிவு"அனைவருக்கும் இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களை" தெரிவித்து மகிழ்கிறது.
  • பனிக் கோயில் கொண்டாட்டம்.

  • 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி யான்ச்சிங் மாவட்டத்தில் நடைபெறும். வசந்த விழாவின் போது, இங்கே சுற்றுலா பயணிகள் பனி உலகத்தில் விளையாடுகின்ற காட்சி.
  • அழகான செல்ல பிராணிகளின் வசந்த விழா

  • ஒரே குடும்பத்தின் 7 தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் புகைப்படம்

  • சீனாவின் செஜியங் மாநிலத்தின் செங்சோ மாவட்டம், ஸிசெ கிராமத்தில், ரென் என்ற குடும்ப பெயர் கொண்ட குடும்பத்தின் 7 தலைமுறைகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த ஊரில் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
  • பெய்ஜிங்கில் வெளிநாட்டவர்களின் வசந்த விழாக் கொண்டாட்டம்

  • இந்த காணொளியில் 5 ஸ்பெயின் இளைஞர்கள் பெய்ஜிங்கில் வசந்த விழாவைக் கொண்டாடும் காட்சியைப் பார்க்கலாம்.
  • குழந்தைகளின் வசந்த விழா கொண்டாட்டம்

  • ஆண்டுதோறும் வசந்த விழாக் கொண்டாட்டம் நடைபெறும் போது, குழந்தைகளுக்கு மிக மிக மகிழ்ச்சியடையும் நேரம்
  • ஹு தொங்கில் வசந்த விழாக் கொண்டாட்டம்

  • சீனாவில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் சீனப் பெருஞ்சுவரை அடுத்து அதிகம் காணவிரும்பும் இடங்களில் மிக முக்கியமானது ஹு தொங் எனப்படும் குறுகலான நடைபாதைகள். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இத்தகைய ஹு தொங் நடைபாதைகளை அதிகமாக காண முடியும். இன்று உலகின் எந்தவொரு வளர்ந்த நாடுகளிலும் காணப்படும் பிரமிப்பை நீங்கள் பெய்ஜிங்கில் கண்டுணர முடியும்.
  • அந்நிய கலாச்சாரங்கள் நிறைந்த கேளிக்கை பூங்கா

  • சீனப் புத்தாண்டு மற்றும் உலகச் சுவை என்ற தலைப்பிலான கேளிக்கை பூங்கா வசந்த விழாக் கொண்டாட்டத்தின்போது சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள ஸிஜிங்சன் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அங்கே அந்நிய கலாச்சாரங்கள் நிறைந்த சூழ்நிலையை உள்ளூர் மக்கள் உணரலாம்
  • "福"எழுத்துக்களை ஒட்டுவது பற்றிய பழைய வழக்கம்

  • சீனப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு, மக்கள், தங்களது வீட்டில் "福"வடிவிலான எழுத்துக்களை ஒட்டுவது, பழைய வழக்கம். அதன் மூலம் புத்தாண்டில் நல்ல அதிர்ஷ்டங்கள் பெற முடியும் என்று சீன மக்கள் நம்புகின்றனர். இருப்பினும், வீட்டின் சில இடங்களில் இந்த எழுத்து தலைகீழாக காணப்படும். இதற்கு காரணம் என்ன?

  • சீனாவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான "சேவல்" தொல் பொருள்

  • சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் குவங்கான் மாவட்டத்திலுள்ள சன்ஷிங்டுய் எனும் அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற "சேவல்"தொல் பொருள் இடம்பெறுகிறது. தற்போதைய நிலவரப்படி இந்த தொல் பொருள் சுமார் 3000 முதல் 5000 வரை ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

  • இலண்டனில் சீனப் புத்தாண்டு விழாக் கொண்டாட்டம்

  • ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீனப் புத்தாண்டு வசந்த விழாக் கொண்டாட்டம் ஜனவரி 29ஆம் நாள் பிரிட்டனின் இலண்டனிலுள்ள டிராபல்கர் சதுக்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கொண்டாட்டம், ஆசியாவை நீங்கலாக, மிக பெரிய அளவில் நடைபெறும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது.
  • கொண்டாட்டங்கள் நிறைந்த கேளிக்கை பூங்கா

  • மியாவ் என்பதற்கு கோயில் என்றும் ஹுய் என்பதற்குக் கூடுதல் என்றும் பொருள். இப்பொழுது கோயில்கள் மட்டுமல்லாமல் பூங்காக்களிலும் இத்தகைய ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது
  • பேசும் படம்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் புதிய வழக்கங்கள்

  • சீனப் புத்தாண்டு விழாவான வசந்த விழா, சீனாவில் மிக உற்சாகமாவும் சிறப்பாகவும் கொண்டாடப்படும் பாரம்பரிய விழவாகும். பழைய வழக்கங்களைத் தவிரவும், கடந்த சில ஆண்டுகளில் புதிய வழக்கங்கள் படிப்படியாக தோன்றி வருகின்றன.

  • பழைய விழாக் கொண்டாட்டத்தில் காணப்படும் புதிய வழக்கங்கள்

  • சி.சி.டி.வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வசந்த விழாக் கொண்டாட்டம் எனும் சிறப்பு நிகழ்ச்சியைக் கண்டுமகிழ்வது, கைப்பேசி மூலம் பணப் பரிசுகளை பெறுவது, கைப்பேசி மூலம் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது, வீட்டில் தங்குவதற்குப் பதிலாக வெளியே சுற்றுலா செல்வது ஆகிய வழக்கங்கள் தற்போது மக்களுடன் உறவாடி வருகின்றன.
  • சீனப் புத்தாண்டு மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

  • இந்தச் சிறப்புக் காணொளியில், சீனாவின் பரந்த நிலப்பரப்பில் காணப்படும் பல்வகை பழக்க வழக்கக் கலாச்சாரங்களும் சீனப் புத்தாண்டு விழாவை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் காட்சிகளும், ஓவிய கலை, தேசிய நடனம், நவீன ஒளி தொழில் நுட்பம் உள்ளிட்ட மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றன.
  • பேசும் படம்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்

  • சீனாவில் உள்ள பெருஞ்சுவர், பறவைக் கூடு என்று அழைக்கப்படும் தேசிய விளையாட்டு அரங்கம், சோர்க்கக் கோயில் ஆகிய கட்டிடச் சின்னங்களும், பின்டாங்ஹுலு, ஜியவ்ஜி, சொங்ஜி,லியன்மோ ஆகிய பழையான சீன உணவுப் பொருட்களும், ஓவியங்கள், காகித கத்தரிப்பு சீன முடிச்சு, யாங்கே நடனம், பட்டாசுகள் ஆகிய சீனப் புத்தாண்டு கொண்டாட்ட அம்சங்களும் காணப்படும்
  • விலங்குச் சின்னங்கள் மற்றும் சீன ஆண்டு அட்டவனை

  • சீன ஜோதிடம் என்பது 12 விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு, சீன வருடங்கள் அல்லது பிறப்புகளின்படி கணிக்கப்படும் ஒரு முறையாகும். மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன ஜோதிடம் கணிக்கப்படுகிறது.
  • பழையன கழிந்து புதியன புகுதல்

  • தமிழ் மொழியில் "பழையன கழிந்து புதியன புகுதல்", சீன மொழியில் சொல்வது எப்படி?  
    தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டத்தைப் போல சீன மக்கள் உற்சாகமாகவும் சிறப்பாகவும் வசந்த விழாவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. சீனப் புத்தாண்டின் முதல் நாளிற்கு முந்தைய இரவு, சு ஷி என அழைக்கப்படுகிறது. சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம், சு ஷி முதல் நடைபெறத் துவங்குவது பழக்க வழக்கம். சு ஷி என்பதற்கு சீன மொழியில் "பழையன கழிந்து புதியன புகுக" என்று பொருள்
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040