• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-17 16:43:15    
வேளான் துறையில் ஆய்வுப்பணி

cri
வேளாண் துறையிலான ஆய்வுகள் சிறிதாக இருந்தாலும் மிக அதிக பயனை மக்களுக்கு வழங்கும். வேளாண்மை எல்லா மக்களின் அன்றாட அடிப்படை தேவையோடு தொடர்புடையதாக இருப்பதே அதற்கான முக்கிய காரணமாகும். வேளாண் தொழில்களில் அதிக இலாபம் இல்லை, வேறு வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று பலர் தங்கள் தொழில் துறையையே மாற்றிவிட்டனர்.

அதனால் வேளாண் தொழிலில் சவால்கள் அதிகரித்தன. பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைய தொடங்கியது. வேளாண் தொழிலை மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் குறைய தொடங்கினர். இது ஒருபுறமிருக்க மறுபறம் உணவு தேவை அதிகரிக்க தொடங்கியது. அப்படிப்பட்ட நெருக்கடியின் போது தான் அறிவியல் ரீதியாக பயிரிடப்படுகின்ற நிலங்களில் அதிகமான உற்பத்தி பயன்பாடு என்ற எண்ணம் செயலாக்கம் செய்யப்பட்டது. மேலும் இருசாதி நெல்களை கலந்து புதிய வகை நெற்பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சாகுபடி செய்யப்பட தொடங்கின. இத்தகைய ஆய்வில் பல ஆண்டுகள் செலவிட்டு இன்று கலப்பின அரிசியின் தந்தை என்று அழைக்கப்படும் அளவுக்கு சாதனை படைத்துள்ள ஆய்வாளரின் முயற்சியை கேட்க இருக்கின்றோம்.


சீனாவில் Yuan Longping என்பவர் ஒரு மூ நிலப்பரப்புக்கு அதாவது 0.066 ஹெக்டேருக்கு அல்லது 710.42 சதுரஅடி நிலபரப்புக்கு 900 கிலோ அரிசி பயன்பாடு பெற வேண்டும் என்ற ஆய்வில் தற்போது முனைப்போடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சீன அறிவியல் அகாடமியில் பயின்றுள்ள அவர் 1960 களிலிருந்தே அதிக பயன்பாடு தருகின்ற கலப்பின அரிசி ஆய்வில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். இந்த ஆய்வில் பல்வேறு கனிகளை பெற்றுள்ள அவர் 1997 ஆம் ஆண்டு ஒரு மூ நிலபரப்புக்கு 700 கிலோ என்ற இலக்கை நனவாக்கினார்.


தனது ஆய்வை அத்தோடு அவர் நிறுத்தி கொள்ளவில்லை. ஒரு மூ நிலப்பரப்புக்கு 800 கிலோ பயன்பாடு பெற வேண்டுமென கலப்பின முறையால் ஆய்வை தொடர்ந்தார். அந்த இலக்கை 2000 – 2004 ஆண்டுகளில் அவர் அடைந்தார். இன்னும் அவரது முயற்சி தொடர்கிறது. அதாவது ஒரு மூ நிலப்பரப்புக்கு 900 கிலோ என்ற இலக்கை 2010 ஆண்டிற்குள் அடைய வேண்டுமென்று பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார். Hainan மாநிலத்தில் தனது ஆய்வுக்கான வயலை Yuan கொண்டுள்ளார். ஆனால் Hunan னில் 20 கிராமப் பகுதிகளில் அவர் நடத்தும் ஆய்வின் சோதனை பயிர்கள் விளைச்சலுக்காக பயிரிப்பட்டுள்ளன. அதில் 18 பகுதிகளிலான ஆய்வு வெற்றி பெற்றுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் 1.6 மில்லியன் மக்கள் தொகையை சீனா கொண்டிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. விளைச்சலை அதிக பயன்பாட்டோடு பெறுவது என்பது நாட்டின் உயருகின்ற மக்கள் தொகையின் தேவைக்கேற்ற உணவை உற்பத்தி செய்ய உதவும். அதிக பயன்பாடு கொண்ட கலப்பின அரிசி சீன வேளாண் வரலாற்றில் பெறப்பட்ட மாபெரும் வெற்றி என்று சீன வேளாண் அறிவியல் அகாடமியின் தலைவர் Zhai Huqu குறிப்பிடுகிறார். இம்முயற்சிகள் 1970 களின் முற்பகுதியில் வளர்ச்சியடைந்து அடுத்த 25 ஆண்டுகளில் 400 மில்லியன் உணவு அளவை அதிகரிக்க செய்தது. விளைநில பரப்பு குறைந்த போதிலும் அதிக பயன்பாடு தரும் கலப்பின அரிசி ஆய்வின் விளைவால் கடந்த வருடம் அரிசி விளைச்சல் 500 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. சீனாவின் ஒட்டுமொத்த விளைநிலப்பரப்புகளில் பாதியளவில் Yuan அவர்கள் ஆய்வால் உருவாக்கிய கலப்பின அரிசி பயிரிப்படுவதோடு 20 வெளிநாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது. அண்மையில் நடத்தப்பட்ட இணையதள கருத்துகணிப்பில் பசி, பட்டினி ஒழிப்பிற்காக Yuan Longping செய்துள்ள பங்களிப்பை பாராட்டி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படலாம் என்று இக்கணிப்பில் கலந்து கொண்டோர் பரிந்துரை செய்துள்ளனர். சீன நடுவண் தொலைக்காட்சி நடத்திய ஆண்டின் வர்த்தக நபர்களின் வரிசைபட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒருவராக Yuan தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். உலக அளவில் தானியங்களின் விலை உயர்கின்ற இக்கால சூழலில் வேளாண் துறையிலான இத்தகைய ஆய்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.