• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-28 11:37:20    
ஒளிமயமாகும் Shangrilaவின் எதிர்காலம்

cri

தற்போது, சுற்றுச்சூழல் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு என்ற கருத்து, Shangrilaவிலுள்ள ஒவ்வொரு நகரவாசிகளின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. ஆதிகால உயிரின வாழ்க்கையின் அழகான இயற்கை காட்சிகளை நிலைநிறுத்துவதே, Shangrilaவை மேலும் சிறப்பாக இருக்கச் செய்ய முடியும் என்று Shangrilaவின் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Jiantang வட்டத்தின் nuoxi கிராமத்தில் வாழ்கின்ற ciwangpingcuo கூறியதாவது,

முன்பு, பெரும்பாலான திபெத் இனத்தினர்கள், மரத்தால் கட்டப்பட்ட, மாடி கட்டிடங்களில் தங்கியிருந்தனர். கிராமத்திலுள்ள வீடு மிகவும் பெரிதாக இருந்தால், அந்த குடும்பத்தின் ஆணுக்கு அதிக திறமை உண்டு என்று கருதப்பட்டது. ஆனால், அவ்வகை வீடுகளுக்கு அதிகமான செலவானதோடு, அவை சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தியது. மலையிலுள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன. இருந்தாலும், தற்போது, அரை பகுதிக்கும் மேற்பட்டோரின் கருத்து தான் மாறியுள்ளது. குளிர்காலத்தில் அரசு, எங்களுக்கு சூரிய ஆற்றல் மூலமான வெப்பக் கருவியை இலவசமாக பொருத்தியுள்ளது என்றார் அவர்.

உள்ளூர் அரசு, கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சூரிய ஆற்றல் மூலமான வெப்ப வசதிகளை பொருத்துவது மட்டுமல்ல, மீத்தேன் வாயு குளத்தைக் கட்டியமைக்க உதவி செய்வதற்கும், பணம் ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, எல்லோரும், தூய்மையான சூரிய ஆற்றல் மற்றும் மீத்தேன் வாயுவா எரியாற்றல்களாக பயன்படுத்துகின்றோம் என்று ciwangpingcuo கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, Shangrilaவின் சுற்றுலாத் துறை இடைவிடாமல் வளர்வதுடன், சுற்றுலா வளத்தை தொடர்ந்து வளர்ப்பது, ஆதிகால இயற்கைக் காட்சிகளை அப்படியே பாதுகாப்பது முதலிய பிரச்சினைகள், Shangrila மக்களின் கருத்தில் நிலைகொண்டுள்ளன. Diqing திபெத் இனத் தன்னாட்சிச் சோவின் செயலாளர் qizhala கூறியதாவது,

நாங்கள், உரியின வாழ்க்கைச் சூழலையும், மானிட வளத்தையும், நீண்டகாலமாகப் பாதுகாக்க விரும்புகிறோம். கடந்த சில ஆண்டுகளாக, இங்குள்ள சுற்றுலா விரைவாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில், பயனுள்ள, தொடர்ந்து வளர்ச்சி பெறும் சுற்றுலா இடமாக இது மாறப் பாடுபடுவோம் என்றார் அவர்.


1 2 3 4