• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 14:43:45    
வான்மதி

cri
அன்புள்ள நேயர்களே, வணக்கம். வான்மதி பேசுகின்றேன். முதலில் புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

2008ஆம் ஆண்டு, நினைவில் நீங்காத இடம் பிடிக்கும் ஓராண்டு ஆகும். அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்துள்ள ஆண்டாகவும் இன்பத்துன்பங்கள் இணைந்து ஏற்பட்ட ஆண்டாகவும் இருக்கிறது என கருதுகின்றேன். வென் ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம், சீன மக்களுக்கு துயரத்தை கொண்டு வந்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையையும் மன உறுதியையும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. சீனாவுக்கு நன்கொடை வழங்கிய நாடுகள் மற்றும் வெளிநாட்டு நண்பர்களின் நட்புறவையும் நல்லெண்ணத்தையும் உணர்ந்துள்ளோம். குறிப்பாக நேயர்களில் சிலர் நன்கொடை செய்துள்ளனர். நாங்கள் அனைவரும் மன உருகினோம்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, குறிப்பிடத்தக்க மற்றொரு நிகழ்ச்சி. சீன விளையாட்டு வீரர்கள் சீன மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புடன், சிறந்த சாதனையைப் பெற்று, சீனாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தெரிவித்தனர். பெய்ஜிங்கில் பிறந்த நான் பெருமையையும் மகிழ்ச்சியையும் அடைகின்றேன். நேயர்களின் ஆதரவும் பாராட்டும் அப்போது பரபரப்பாக வேலை செய்த எங்களுக்கு ஊக்கமளித்துள்ளன.

புத்தாண்டில் நான் பொறுப்பேற்கும் பணியில் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் எனக்கான கோரிக்கையை நான் மேலும் வலுப்படுத்துவேன். மேலதிகக் கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் பெற விரும்புகின்றேன்.

என்னுடன் சேர்ந்து வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் நல்லவர்கள். அவர்களுடன் மேலும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் பழகுவதை எதிர்பார்க்கின்றேன். நமது தமிழ்ப்பிரிவு மேலும் குடும்பத்தைப் போல் பணியாளருக்கு நிறைந்த அன்பைக் காட்டும் அதே வேளையில் நேயர்களுக்கும் மேலும் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என நம்புகின்றேன்.

அன்புள்ள நேயர்களே, தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளியுங்கள். நன்றி, வணக்கம்.