• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-07 12:30:32    
சீன-பிரேசில் புவி வள ஆய்வு செயற்கைக் கோள்

cri

டிசம்பர் திங்கள் 23ம் நாள் சீன-பிரேசில் புவி வள ஆய்வு செயற்கைக் கோளின் 20வது ஆண்டு நிறைவு மாநாடு பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனாவும் பிரேசிலும் கூட்டாக ஆராய்ந்து தயாரித்த புவி வள ஆய்வு செயற்கைக் கோள் தற்போது தொடர்புடைய நாடுகளில் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தேசிய நில வளத்தின் மீதான ஆய்வு, வளர்ச்சி, பயன்பாடு மற்றும் மேலாண்மை துறையில் சீனாவுக்கும் தொடர்புடைய நாடுகளுக்கும் இது சிறப்பாக சேவை புரிந்து வருகின்றது என்று தெரிய வருகின்றது.

புவி வள ஆய்வு செயற்கை கோள் என்பது பூமியிலுள்ள இயற்கை வளங்களைக் கண்டறிந்து அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளும் செயற்கைக் கோளாகும். பூமியின் மேற்பரப்பைக் கடந்து, மனிதரின் கண்களுக்கு புலப்படாத நிலத்திற்கு அடியிலான கட்டமைப்பையும், நிலத்தடி வளத்தையும் இது கண்டுபிடிக்கலாம். மேலும், வனம், கடல், காற்று முதலிய வளங்களை இது கண்காணித்து, பல்வகை கடுமையான இயற்கை சீற்றங்கள் பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கலாம். சீனாவும் பிரேசலும் வளமிக்க பெரிய நாடுகள் ஆகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இவ்விரு நாடுகள் புவி வள ஆய்வு செயற்கைக் கோளை கூட்டாக ஆராய்ந்து தயாரிக்க துவங்கின என்று சீனத் தேசிய விண்வெளிப் பயண ஆணையத்தின் தலைவர் சுன் லாய் யேன் கூறினார். இதுவரை மொத்தம் 3 சீன-பிரேசல் புவி வள ஆய்வுச் செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. புறவிண்வெளியில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் முன் மாதிரியாக இது அழைக்கப்படுகின்றது என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

இதுவரை, இந்த 3 செயற்கைக் கோள்கள் சீனாவுக்கு மொத்தம் 5 இலட்சத்துக்கு மேலான தரவுகளையும் படங்களையும் அனுப்பியுள்ளன. சீனத் தேசிய நிலப்பரப்பின் 3 மடங்குகளுக்கு இது சமமாகும். சீனாவின் தேசிய நில வளம், நகரத் திட்டம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு முதலிய பல துறைகளில் சீன-பிரேசில் புவி வள ஆய்வுச் செயற்கைக் கோள்கள் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. இது மட்டுமல்ல, பிரேசிலின் பொருளாதாரக் கட்டுமானம், சமூக வளர்ச்சி முதலிய துறைகளிலும் அவை மென்மேலும் அதிகமாக பங்கு ஆற்றி வருகின்றன என்றார் அவர்.

1 2 3