• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-19 16:59:14    
பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி

cri

இவ்வாண்டில், பட்டத்தாரிகளுக்கான வேலை வாய்ப்பு எண்ணிக்கையில் குறைவு ஏற்பட பல காரணங்கள் நிலவுகின்றன. முதலில், உலகளாவில் நிதி நெருக்கடியின் பாதிப்பு மென்மேலும் அதிகமாகி வருகின்றது. சீனாவின் முழு வேலை வாய்ப்புச் சந்தை இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கவோ பாதிப்பை தவிர்க்கவோ முடியாது. சீன மனித வள ஆற்றல் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சின் மனித ஆற்றல் சந்தைப் பிரிவின் தலைவர் Bi xue rong அம்மையார் கூறியதாவது

உரை 2

உலக நிதி நெருக்கடியின் பாதிப்பால், வேலைக்கு அமர்த்தும் தேவை குறையும். சில ஏற்றுமதி தொழில் நிறுவனங்களும் வெளிநாட்டு முதலீட்டுக் கூட்டு நிறுவனங்களும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. அவற்றில் சில புதிய பணியாளர்களை அமர்த்துவதை நிறுத்தியுள்ளன என்றார் அவர்.

அடுத்ததாக, சீனாவில், உள்ளார்ந்த பிரச்சினைகள் நிலவுகின்றன. தற்போது, இளங்கலை பட்டத்தாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பணி பற்றிய கொள்கைகளும் சேவை அமைப்புமுறையும் மேம்படுத்தப்படவில்லை என்று சீன மனித வள ஆற்றல் மற்றும் சமூகக் காப்புறுதித் துறை துணை அமைச்சர் சாங் சியோ சியேன் சுட்டிக்காட்டினார். பட்டத்தாரிகளின் கல்வி அறிவு, சிறப்பு தொழில் நுட்ப ஆற்றல் ஆகியவற்றுக்கும் வேலை வாய்ப்பு சந்தையின் உண்மை தேவைக்கும் இடையில் பெரும் இடைவெளி நிலவுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

தவிரவும், பெரிய நகரங்களில் நல்ல சம்பாதிக்கும் வேலை வாய்ப்புகளைப் பெறவே சீனப் பட்டத்தாரிகள் விரும்புகின்றனர். வளர்ச்சி குன்றிய பிரதேசங்களுக்குச் செல்ல அவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அதுவும், வேலை வாய்ப்புகளின் கடும் நிலைமையைத் தீவிரமாக்கியது.

தற்போதைய நிலைமையில், சீன அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது. கடந்த ஆண்டின் இறுதியில், சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ், சீன விண்வெளிப்பயணப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். பட்டத்தாரிகளின் வேலை வாய்ப்பு பிரச்சினையை நாட்டின் வேலை வாய்ப்புப் பணியின் முதன்மை பகுதியாக அரசு கருதுகின்றது என்று அவர் மாணவர்களிடம் தெரிவித்தார்.

1 2 3 4